தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆந்திராவை நெருங்கும் புயல்; கனமழைக்குத் தயாராகும் தமிழகம்

1 mins read
f2c96453-9741-4608-8777-b314f8e109f6
‘மோந்தா’ புயல் நெருங்கி வருவதன் விளைவாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) கனமழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற்று, ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 28) கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘மோந்தா’ புயல் நெருங்கி வருவதன் விளைவாகத் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் ஆகியவற்றுடன் யூனியன் பிரதேசமான துச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) கனமழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்குக் கிழக்கு- தென்கிழக்குத் திசையில் 970 கிலோ மீட்டர்தூரத்திலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு தென்கிழக்குத் திசையில் 990 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாகவும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் அது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகே தீவிரப் புயலாக 28ஆம் தேதி மாலை அல்லது இரவில் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, மணிக்கு 90-100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்