லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் சொத்து தகராறு காரணமாக இளம்பெண் மூலம் அண்டை வீட்டார்மீது பொய் வழக்குகளைத் தொடுத்த வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் பரமானந்த குப்தாவுக்கும் அவரது அண்டை வீட்டுக்காரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது.
இதனால், கடும் கோபத்தில் இருந்த பரமானந்தா அவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் இளம்பெண் ஒருவர் மூலம் பாலியல் புகார் உட்பட 11 வழக்குகளையும் தனது பெயரில் 18 வழக்குகளையும் அண்டை வீட்டார்மீது தொடுத்துள்ளார்.
அந்தப் புகார்கள் குறித்த விவரங்களைப் பெற அண்டை வீட்டார் லக்னா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அவ்வழக்குகளின் விசாரணை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், புகார்கள் அனைத்தும் போலியானவை என்பது நிரூபிக்கப்பட்டது.
பொய்ப் புகார்கள் அளித்த பரமானந்த குப்தாவுக்கு ஆயுள் தண்டனையும் 510,000 ரூபாய் அபராதமும் லக்னோ உயர் நீதிமன்றம் விதித்தது.
மேலும், பரமானந்தாவின் வழக்கறிஞர் உரிமத்தையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
தொடர்புடைய செய்திகள்
அவருடன் இணைந்து செயல்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.