குப்பம் தொகுதியில் ரூ.2,203 கோடியில் ஏழு தொழிற்சாலைகளுக்கு சந்திரபாபு நாயுடு அடிக்கல்

2 mins read
7b81f475-a662-4c4a-b479-7865a7844f99
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம்: ஊடகம்

அமராவதி: தனது சொந்த சட்டமன்றத் தொகு​தி​யான குப்பத்தை தொழில் மையமாக மாற்றும் வகையில், ஏழு புதிய தொழிற்சாலைகளுக்கு காணொளிக் காட்சிமூலம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.

இந்தத் தொழிற்சாலைகள் ரூ.2,203 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளன. இந்த முதலீட்டின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறக்குறைய 24,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமராவதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபடியே, சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் ஒரே நேரத்தில் ஏழு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, தொகுதி மக்கள், தொழிற்சாலை நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு உரையாடினார்.

“ஆந்​தி​ரா-தமிழகம்​-கர்​நாடக மாநிலங்​களின் எல்​லை​யில் குப்​பம் தொகுதி அமைந்​துள்​ளது. ஆதலால், இங்கு தொழிற்​சாலைகள் அமைப்​ப​தன் மூலம் மூன்று மாநிலங்​களுக்​கும் இடையிலான போக்​கு​வரத்து வசதி மிகச் சுலபமாக மாறி​விடும். விரை​வில் குப்​பத்​தில் விமான நிலை​யமும் வர உள்​ளது.

“குப்​பம் ரயில் நிலை​ய​மும் விரிவாக்கப்​பட்​டு, அனைத்துலகத் தரத்துக்கு நவீனமயமாக்கப்படும். சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகள்மூலம், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்களை ஏற்றுமதி செய்யச் சிறந்த வாய்ப்புகள் உருவாகும்.

“விரை​வில் குப்​பம் தொகு​தி​யில் ரூ.6,300 கோடி​யில் மேலும் எட்டு தொழிற்​சாலைகள் வர உள்​ளன என்று குறிப்பிட்டவர், இப்​போது அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்ள ஏழு தொழிற்​சாலைகள் மூலம் 24,000 பேருக்கு வேலை​வாய்ப்புகள் கிடைக்​கும்,” என்றார்.

“தொழில்துறை வளர்ச்சியுடன் கல்வி, சுகாதார மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். குப்பம் ஒரு முக்கிய கல்வி மையமாக மேம்படுத்தப்படும். இங்கு ஏற்கெனவே மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் திராவிடப் பல்கலைக்கழகம் போன்றவை செயல்படுகின்றன.

“இங்​கிருந்து தரமான பழங்​கள் வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்றன.

“வீடு​களுக்கே சென்று மருத்​துவ சிகிச்​சைகள் அளிக்​கப்​படு​கின்​றன. ஏஐ தொழில்​நுட்​பம் வருங்​காலத்​தில் மருத்​துவ ஆலோ​சக​ராக​வும் மாறும்,” என்று முதல்​வர்​ சந்​திர​பாபு நா​யுடு பேசி​னார்.

குறிப்புச் சொற்கள்