தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சர்ச்சை நீடிக்கும் வேளையில் தெலுங்கானா அமைச்சராக அசாருதீன் பதவி ஏற்பு

1 mins read
b38b48b0-f64b-4096-855d-ad55a7ff8666
முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் முகம்மது அசாருதீன் அமைச்சராகப் பதவி ஏற்றார். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் முகம்மது அசாருதீன் தெலுங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) பதவி ஏற்றார்.

ஆளுநர் ஜிஷ்னு தேவ் வர்மா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கான துறை இன்னும் ஒதுக்கப்படவில்லை.

இதன் மூலம் தெலுங்கானா மாநிலத்தின் முதல் முஸ்லிம் அமைச்சர் என்ற பெருமையை அசாருதீன் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் நீண்டகாலமாகக் காலியாக இருந்தது.

இதற்கிடையே, 30 விழுக்காடு முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட ஜுபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற அசாருதீனுக்கு காங்கிரஸ் கட்சி அமைச்சர் பதவி அளித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குறை கூறி வருகின்றனர்.

அமைச்சர் பதவி வகிக்க ஒருவர் சட்டமன்ற உறுப்பினராகவோ சட்ட மேலவை உறுப்பினராகவோ இருப்பது அவசியம். ஆனால், இந்த இரண்டில் உறுப்பினராக இல்லாத அசாருதீனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

அரசியலமைப்புச் சட்டப்படி ஆறு மாத காலத்திற்குள் அவர் இந்த இரண்டில் ஒன்றில் உறுப்பினர் ஆக வேண்டும்.

தெலுங்கானா காங்கிரஸ் அரசு அண்மையில் சட்ட மேலவை உறுப்பினராக அசாருதீனை நியமித்தது. ஆனால், அதற்கான உத்தரவில் ஆளுநர் இன்னும் கையெழுத்திடவில்லை.

குறிப்புச் சொற்கள்