தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்புமணி தனிக்கட்சி தொடங்கட்டும்: ராமதாஸ் திட்டவட்டம்

1 mins read
544381f5-b352-4273-9f60-b0c7f4c9713d
ராமதாஸ். - படம்: ஊடகம்

விழுப்புரம்: தனிக்கட்சி தொடங்குவதுதான் அன்புமணிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நல்லது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தைலாபுரத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 16) பேசிய அவர், அண்மையில் அன்புமணி பேசிய பேச்சுகள் தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் உலுக்கியிருக்கும், உறுத்தியிருக்கும் என்றார்.

“படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிபட்ட சொற்களைப் பேசியிருக்கமாட்டார். அதனால்தான் ‘அன்புமணிக்குத் தலைமைப்பண்பு இல்லை எனக் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் சொன்னேன். நோய் தொற்றும் அளவுக்கு நான் வியாதியில் இல்லை,” என்றார் ராமதாஸ்.

பாமகவைத் தோற்றுவித்த தாமே அதன் உரிமையாளர் என்று குறிப்பிட்ட அவர், பாமகவுக்கும் அன்புமணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

“அன்புமணி பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவர் தனிக்கட்சி தொடங்குவதுதான் நல்லது. புதுக்கட்சி தொடங்குவதுதான் அவரைச் சுற்றியுள்ள கூட்டத்திற்கும் நல்லது. அவர்களுக்குப் பொறுப்பு மட்டும்தான் கிடைக்கும். எம்எல்ஏ, எம்பி பதவி எல்லாம் கிடைக்காது,” என்றார் ராமதாஸ்.

குறிப்புச் சொற்கள்