புதுடெல்லி: இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 4,000 யானைகள் குறைந்திருப்பது அண்மைய கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள யானைகளின் எண்ணிக்கை 27,312ஆக இருந்தது.
இந்நிலையில், அவற்றின் தற்போதைய எண்ணிக்கை 22,446ஆக உள்ளது. இதன் மூலம் 4,065 யானைகள் குறைந்துள்ளன.
அண்மைய கணக்கெடுப்பின்படி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 11,934 யானைகள் உள்ளன. கர்நாடகா (6,013), அசாம் (4,159), கேரளா (2,783), தமிழ்நாடு (3,136) மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
யானைகளின் வாழிடங்களில் பல தேயிலைத் தோட்டங்களாக மாறி வருகின்றன. மேலும், நிலங்களில் வேலி அமைத்தல், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது போன்ற காரணங்களால் யானைகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அண்மைய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வன உயிரினச் சட்டங்களில் மாற்றங்களைச் செய்து, உடனடியாக யானைகள் வாழிடங்கள் குறையாமல் இருப்பதை உறுதிசெய்தால் மட்டுமே அவற்றின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க முடியும்,” என வன உயிரின ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

