இந்துார்: மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துார் - தேவாஸ் நெடுஞ்சாலையில் 30 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைப்பதற்காகக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அண்மையில், அப்பகுதியில் கனமழை பொழிந்ததால் அச்சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், ஜூன் 26ஆம்தேதி மாலை அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் நகர முடியாமல் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றன. 8 கிமீ., தூரத்துக்கு நீண்ட அந்த நெரிசல் 32 மணி நேரம் வரை நீடித்தது. இதில், 4,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கித் தவித்தன. மாற்றுப் பாதைக்கும் வழியில்லாதது, நிலைமையை மேலும் மோசமாக்கியது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி, 32 வயது சந்தீப் படேல், 62 வயது கமல் பஞ்சல், 55 வயது பல்ராம் படேல் ஆகியோர் உயிரிழந்தனர்.