சமூகம்

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு உட்லண்ட்ஸ் இந்திய நற்பணிச் செயற்குழுவும் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து ‘தமிழோடு விளையாடு’ என்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரலில் ஏற்பாடு செய்திருந்தன.
சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலை ஒருவர் இழக்க நேரிட்டால், அவர் சார்பாக மற்றொருவர் முடிவெடுக்க உரிய அதிகாரத்தை வழங்கும் ஆவணம் ‘நிரந்தர உரிமைப் பத்திரம்’. அந்த ஆவணத்திற்கு இந்தியச் சமூகம் இலவசமாக பதிந்துகொள்ளும் நிகழ்வு மே 12ஆம் தேதி சிராங்கூன் சாலையில் உள்ள பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றது.
சிண்டா இளையர் குழு, ஊனமுற்றோருக்கான ‘செஞ்சிலுவை இல்லம்’ உடன் இணைந்து, சமூகத்தில் உள்ள ஊனமுற்ற முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் முயற்சி ஒன்றை மேற்கொண்டது.  
மொடர்னா சிங்கப்பூர், ‘யூகவ்’ அமைப்புடன் இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வின் முடிவில், சிங்கப்பூரில் உள்ள மூத்தோரில் 40 விழுக்காட்டினர், மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கான எண்ணம் ஏதுமில்லை என்று கூறியதாகத் தெரியவந்துள்ளது.