இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது 100வது படமாக, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் ஒரு பாடலை பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளதாக ஜி.வி. பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜாவின் 100வது படமான ‘பிரியாணி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘எதிர்த்து நில் எதிரியே இல்லை’ என்ற பாடலின் ஒரு பகுதியை ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியிருந்தார்.
சரியாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100வது படமான ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலைப் பாடி, அந்தக் காலத்து ‘அன்புக் கடனை’ திருப்பிச் செலுத்தியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் குரலில் இப்பாடலைக் கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகிறது.

