‘காஞ்சனா 4’ல் ராஷ்மிகா மந்தனா

1 mins read
0e175c1c-05b3-4802-aaba-cc086567b31a
‘காஞ்சனா 4’ல் ராகவா லாரன்ஸ். - படம்: ஊடகம்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அச்சுறுத்தும் ‘பேய்’ தொடராக ‘காஞ்சனா’ 4ஆம் பாகமும் உருவாகி வருகிறது.

இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான நோரா ஃபதேகி நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எப் ராமச்சந்திரா ராஜு நடிக்கிறார்.

ஏற்கெனவே இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சென்னையில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பை புதுச்சேரியில் சுமார் 30 நாள்கள் நடத்த தயாரிப்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக ‘காஞ்சனா’ தொடரின் சிறப்பு ‘பிளாஷ்பேக்’ காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது இந்த ‘ஃபிளாஷ்பேக்’ காட்சியில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதற்காக அவருக்குப் பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படத்தை கோல்ட் மைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திராஷ்மிகா

தொடர்புடைய செய்திகள்