கலைத்துறையில் இருந்து இப்போது மேலவைக்கு 2 எம்பிக்கள் சென்றுவிட்டார்கள். பாஜக அரசு சார்பில் எம்பி ஆனார் இளையராஜா. தற்பொழுது திமுக சார்பில் கமல்ஹாசனும் எம்பியாகி இருக்கிறார்.
இருவரின் தேர்ந்தெடுப்பு முறையும் வெவ்வேறு என்றாலும் இரண்டு பேருமே தமிழக மேலவை எம்பி என்ற கணக்கில் வருகிறார்கள். ராமராஜன், நெப்போலியன், சரத்குமார், மறைந்த ஜே.கே. ரித்திஷ், எஸ்.எஸ்.சந்திரன் வரிசையில் இப்போது இளையராஜா, கமல்ஹாசனும் நாடாளுமன்றம் சென்று இருக்கிறார்கள்.
இளையராஜா இதுவரை சினிமாவுக்காக நாடாளுமன்றத்தில் பெரிதாக எதுவும் பேசவில்லை. கமல்ஹாசனாவது தான் சார்ந்த சினிமா துறையின் வளர்ச்சிக்காக டெல்லியில் குரல் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது கோலிவுட்.