தமிழ்ப் படத்தில் நடிக்க நல்ல கதைக்காகக் காத்திருக்கிறேன் என்கிறார் நடிகை ஜோதிகா.
தமிழில் ஜோதிகா நடித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்திற்குப் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த , ‘ராட்சசி’, ‘தம்பி’, ‘உடன்பிறப்பே’ படங்களில் நடித்திருந்தார்.
பின்னர், மும்பையில் வீடு மாற தமிழ்ப் படங்களைக் குறைத்துவிட்டார். இந்தியில் ‛சைத்தான்’, ‘ஸ்ரீகாந்த்’ போன்ற சில படங்களிலும், ‛டப்பா கார்டெல்’ உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் நடித்தார். ஆனால், எதுவும் ஜோதிகாவுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கவில்லை. அதனால் நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறாராம்.
பல கதைகளைக் கேட்பவர், எனக்கு இது ஒத்து வராது, இது வெற்றி பெறாது என்று ஒதுக்கிவிடுகிறாராம். அவரின் 2டி நிறுவனமும் முன்புபோல அதிக படங்களைத் தயாரிப்பது இல்லை.
கணவர் நடிப்பு, குழந்தைகள் படிப்பு, பெற்றோர் கவனிப்பில் கவனம் செலுத்துகிறார். அதனால், சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இப்போது ஒரு இணையத்தொடரில் மட்டும் நடிக்கிறார் என்கிறார்கள் அவரின் தோழிகள்