விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தின் வெளியீட்டை நவம்பருக்குத் தள்ளி வைத்துள்ளார் விஷ்ணு விஷால்.
இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விஷ்ணு விஷாலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதற்கிடையே, அக்டோபர் 31 அன்று ‘பாகுபலி தி எபிக்’, ரவி தேஜாவின் ‘மாஸ் ஜாதாரா’ தெலுங்குப் படங்கள் வெளியாக உள்ளன.
அதனால், விஷ்ணு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெலுங்குப் படங்கள் அதிகமாக வெளியாவதால் ‘ஆர்யன்’ படம் தெலுங்கில் மட்டும் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
ராஜமௌலி இயக்கிய பாகுபலி 1 மற்றும் 2ஆம் பாகங்கள் ஒரே திரைப்படமாக இணைக்கப்பட்டு, அக்டோபர் 31ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

