தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியபோது, “விக்ரம் பிரபு நாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் தனது நடிப்பில் மிளிர வேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.
“லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்டக் காட்சிகளுடன் என்னால் எளிதாகத் தொடர்பு கொள்ள முடிந்தது.
“இப்படத்தில் மிஷ்கின் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அதைக் கேட்டவுடன் இந்தப் பாட்டு வெற்றிபெறும் எனச் சொன்னேன்.
“லவ் மேரேஜ்’ என்பது பெரும்பாலான மக்களும் இயல்பாகக் கேட்டிருக்கும் ஒரு வார்த்தை. படத்தின் தலைப்பு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வரும்.
“அத்துடன், பக்கத்து வீட்டுப் பையன்போல் நடித்திருக்கும் விக்ரம் பிரபுவின் நடிப்பும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்,” என்றார்.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தில் சுஷ்மிதா பட் நாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
கிராமிய பின்னணியில் குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 27ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.