அண்மைய தோல்விகளால் சற்றே சோர்வடைந்துள்ள போதிலும், நம்பிக்கை இழக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
அடுத்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் படம் தனக்கு நல்ல திருப்புமுனையாக அமையும் என உறுதியாக நம்புகிறாராம்.
இவர் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள ‘ட்ரெயின்’ வெளியாகப் போகிறது.
அடுத்தபடியாக தெலுங்கு, தமிழில் வெளியாகவிருக்கும் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் சேதுபதி ஜோடியாக ‘வாத்தி’ நாயகி சம்யுக்தா மேனனும் வில்லியாக இந்தி நடிகை தபுவும் நடிக்கிறார்கள். ஹைதராபாத்தில் நடைபெறுகிறது இதன் படப்பிடிப்பு.
“இந்த இரு படங்களும் தென்னிந்திய மொழிகளில் தனது சந்தை மதிப்பை நிச்சயமாக உயர்த்தும் என்றும் அந்த வெற்றிக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார் விஜய் சேதுபதி.
இதற்கிடையே, தாம் முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட இரு படங்களை இவர் திடீரெனக் கைகழுவியதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல என்றும் அப்படங்களை சில மாதங்களுக்கு தள்ளி மட்டுமே வைத்திருப்பதாகவும் அவரது தரப்பில் கூறப்படுகிறது.

