பழம்பெரும் நடிகை காஞ்சனா குறித்து இன்றுள்ள இளையருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியவர், பின்னாள்களில் திரைப்பட நடிகையானார்.
பல வெற்றிப் படங்களில் நடித்து சம்பாதித்தவர், திரையுலகை விட்டு விலகிய பின்னர் மீண்டும் அந்தப் பக்கம் தலைகாட்டவே இல்லை.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தீப் ரெட்டி இயக்கிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் அப்பட நாயகன் விஜய் தேவரகொண்டாவின் பாட்டியாக நடித்திருந்தார் காஞ்சனா.
சில காலத்துக்கு முன்பு அவர் ஏதோ ஓர் ஊரில் கோவில் வாசலில் யாசகம் கேட்டு நாள்களைக் கடத்தி வருவதாகத் தகவல் வெளியானது.
சினிமா வாய்ப்புகள் குறைந்துபோனதால் வருமானம் இன்றி அவர் ஏழ்மை நிலையில் தவிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், உண்மை என்ன என்று பலரும் விசாரித்த போதுதான், தம்மிடம் இருந்த கோடிக்கணக்கான சொத்துகளை திருப்பதி கோவிலுக்கு எழுதிக்கொடுத்துவிட்டார் காஞ்சனா என்பது தெரியவந்தது.
‘ஃபிளாஷ்பேக்’கை முடித்து விஷயத்துக்கு வருவோம்.
இத்தனை ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகியிருந்த காஞ்சனா, மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார். காவல்துறை அதிகாரியான பிரபாசுக்கு ஜோடியாக திரிப்தி டிம்ரி நடிக்க, முழுநீள அதிரடிப் படமாக உருவாகிறது.
இந்நிலையில், பிரபாசின் பிறந்தநாளையொட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 23) வெளியான இப்படத்தின் அறிமுக காணொளி ஒன்றைப் படக்குழு வெளியிட்டது.
படத்தில் நடிக்கும் முக்கியமான நடிகர்களின் பெயர்களைக் கொண்டிருந்த அப்பட்டியலில் பழம்பெரும் நடிகை காஞ்சனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

