இயக்குநர் சங்கர் தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார்.
எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதி ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த ‘வேள்பாரி’ கதையைத்தான் அவர் படமாக்கப் போகிறார். இதற்கான அனுமதியை சங்கர் ஏற்கெனவே பெற்றுள்ளாராம். சு.வெங்கடேசனிடம் இதற்கான தொகையும் முன்பே கொடுக்கப்பட்டுவிட்டதாகத் தகவல்.
பல பிரம்மாண்ட வெற்றி, தோல்விகளைச் சந்தித்துள்ள சங்கர், தனது கனவுப்படம் என்றால் அது ‘வேள்பாரி’ என்று கூறியுள்ளார். பல மேடைகளில் இவ்வாறு அறிவித்தும் உள்ளார்.
இந்நிலையில், ‘காந்தாரா சேப்டர் 1’ படத்தில் தேவாங்கு, குறிஞ்சி மலை, பாரி கதாபாத்திரம், பெண் தெய்வம் தொடர்பான சடங்கு எனப் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தன் படத்திலும் இதேபோன்ற பல காட்சிகள் இருப்பதால் சங்கர் கவலையில் மூழ்கிவிட்டாராம்.

