ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்துக்கு ‘வாரணாசி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பை அறிவிக்கும் காணொளி அண்மையில் வெளியானது.
யூடியூப் தளத்தின் இரு ஒளி வழிகளில் வெளியான அந்தக் காணொளி வெளியான ஒரே நாளில் 23 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படக்குழுவினர், வாழ்த்திய பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ராஜமௌலி தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
2027 கோடை விடுமுறையில் ‘வாரணாசி’ படம் வெளியாக உள்ளது.

