ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்க யாருக்குத்தான் கசக்கும்.
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
‘ரிஸானா-அ கேஜ்ட் பேர்ட்’ (Rizana-A-Caged Bird) என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வரலட்சுமி.
இதில் பிரபல பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, சந்திரன் ருட்னம் இயக்கியுள்ளார்.
இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படமாம்.
“அகாதமி விருது வென்ற ஜெர்மி ஐயன்சுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. அவரது வித்தியாசமான குரலுக்கு நான் தீவிர ரசிகை. அவருடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது குறித்து நினைத்தால் கனவுபோல் உள்ளது.
“மேலும் பல ஹாலிவுட் கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். இலங்கை மட்டுமல்லாது, உலக அளவில் பெயர் வாங்கிய இயக்குநர் சந்திரன் இந்த வாய்ப்பை அளித்திருப்பதற்காக நன்றி,” என்கிறார் வரலட்சுமி.