தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடிவேலு, ஃபஹத் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ல் வெளியீடு

1 mins read
1daef0bb-0102-4dc9-a812-320b301e9d2c
நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், வடிவேலு. - படம்: ஊடகம்

வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள ‘மாரீசன்’ திரைப்படம் இம்மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள படம் ‘மாரீசன்’.

சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படமான இதன் பணிகள் முடிவடைந்து வெளியீடு காணவிருக்கிறது.

அண்மையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ஜூலை 25ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்