தேவையற்ற சர்ச்சைகள்: புலம்பும் ராஷ்மிகா

1 mins read
47724a36-5e1e-40b1-a467-276ddd7c5e38
ராஷ்மிகா. - படம்: ஊடகம்

தாம் சாதாரணமாக தெரிவிக்கும் கருத்துகளைக்கூட சிலர் விமர்சனக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்பதாகக் கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

இதனால் தாம் சொல்லக்கூடிய அனைத்துமே தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும் சில ஊடகங்கள் தாம் பேசியவற்றை தவறாக, திரித்து வெளியிடுவதாகவும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“நான் கூறியவற்றுடன் தங்களுடைய கருத்துகளையும் சேர்த்து சிலர் வெளியிடுகின்றனர். இதனால்தான் வீண் சர்ச்சைகள் ஏற்படுகின்றன. இனி ஊடகங்களிடம் பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.

“நான் பேசும் வார்த்தைகளால் எந்தவிதமான சர்ச்சையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்,” என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.

‘குபேரா’ படத்தையடுத்து, இவர் நடித்துள்ள படம் ‘தி கேர்ள் ஃபிரண்ட்’.

இந்தியில் வெளியான ‘அனிமல்’ படத்தில், அதன் நாயகன் ரன்பீர் கபூர் ஏற்று நடித்த கதாபாத்திரம் குறித்து ராஷ்மிகா தெரிவித்த கருத்து அண்மையில் சர்ச்சையானது.

குறிப்புச் சொற்கள்