‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனத்தின் ‘சிஇஓ’ ஆன உதயநிதி மகன் இன்பநிதி

1 mins read
ef08daf5-3599-49cf-9b56-e404362d0912
உதயநிதி, இன்பநிதி. - படம்: ஊடகம்

எதிர்பார்த்த ஒன்றுதான் இப்போது நடந்துள்ளது.

வேறொன்றுமில்லை. தமிழகத் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி, ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

‘இட்லி கடை’ படத்தை வெளியிடுவதன் மூலம் விநியோகிப்பாளராக அவர் களமிறங்க உள்ளார். இத்தகவலை ரெட் ஜெயன்ட் நிறுவனம் உறுதிசெய்துள்ளது. மேலும், இன்பநிதி தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபடுவார் என்றும் தெரிகிறது.

இன்பநிதிக்கு நடிகர் தனுஷ் உட்பட பலர் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படமான ‘இட்லி கடை’க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்