‘ஃபிலிம்ஃபேர்’ சினிமா ஊடகம் இந்த ஆண்டு மாளவிகா மோகனனுக்கு இரண்டு விருதுகளை அளித்து அவரை மகிழ்வித்துள்ளது.
விருது பெற்ற உற்சாகத்துடன் தமது சமூக ஊடகப் பக்கத்தில் அதுகுறித்துப் பதிவிட்டுள்ளார் மாளவிகா.
‘ஃபிலிம்ஃபேர் கிளாமர் அண்ட் ஸ்டைல் தென்னிந்தியா 2025’ என்ற பெயரில் இந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவற்றுள் இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார் மாளவிகா மோகனன்.
“ஒரே நாளில் ரசிகர்களைக் கவர்ந்த கவர்ச்சி நாயகியாக நான் இரண்டு விருதுகளுக்குத் தேர்வு பெறுவேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. இந்தப் பாராட்டையும் விருதையும் ஒருசேர கையாள முடியவில்லை,” என்று மாளவிகா குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட மறக்கமாட்டார் மாளவிகா. அவை பாலிவுட் நடிகைகளின் படங்களைவிட கவர்ச்சியாக இருக்கும்.
இந்த ஆண்டு தெலுங்குத் திரையுலகத்தினருக்கே அதிக விருதுகள் அளிக்கப்பட்டதாக முணுமுணுப்பு எழுந்துள்ளது. தமிழ் நடிகரான சித்தார்த் மட்டுமே விருதுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

