தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும்: சதா

1 mins read
ed83c5e4-6d11-43b2-a905-67b5980ec526
சதா. - படம்: ஊடகம்

ஒரு காலத்தில், தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம்வந்த சதாவுக்குத் தற்போது 41 வயதாகிறது.

தன்னைத் தேடி வரும் அனைத்து சினிமா வாய்ப்புகளையும் ஒதுக்கிவிடுகிறார்.

நடிக்கவில்லையென்றால், திருமணம் செய்துகொள்ளலாமே என்று கேட்டால், தனக்குத் திருமணத்தில் ஆர்வம் இல்லை என்கிறார்.

முழுமையாக திரையுலகில் இருந்து ஒதுங்கிவிட்ட நிலையில், வனப்பகுதிகளில் சுற்றித்திரிந்து பறவைகளையும் வனவிலங்குகளையும் புகைப்படம் எடுத்து வருகிறார் சதா.

“புகைப்படத் துறையில் நிறைய சாதிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு புகைப்படமும் எனக்குத் தனித்தனி அனுபவங்களைத் தருகின்றன. பல அரிய தகவல்களைத் தெரிந்துகொள்கிறேன்.

“காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும். திருமணத்துக்கும் இது பொருந்தும்,” என்கிறார் சதா.

‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சதா, பின்னர் ‘உன்னாலே உன்னாலே’, ‘அந்நியன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்