என்னை மட்டும் குறிவைக்கிறார்கள்: வருத்தப்படும் கயாது

1 mins read
41959c5e-d5ed-466a-8d58-94a8f22555e1
கயாது லோஹர். - படம்: ஊடகம்

சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி வெளியாகும் அவதூறான தகவல்கள் மிகவும் வேதனை அளிப்பதாகச் சொல்கிறார் கயாது லோஹர்.

தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கரூர் பேரணியில் எனது நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்தேன். இவை எல்லாம் தவெகவின் சுயநல அரசியலுக்காக. விஜய், உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?” என்று நான் பதிவிட்டதாக சமூக ஊடகங்களில் தவறாகப் பகிரப்பட்டது.

“நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனது கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஒருசிலர் என்னை மட்டும் குறிவைத்து அவதூறு பரப்புகிறார்கள். இதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை,” என்று தனது வருத்தத்தைப் பேட்டியில் வெளிப்படுத்தி உள்ளார் கயாது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த கயாது லோஹர், தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘முகில்பேட்டே’ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான கயாது, பிறகு, ‘பதோன்பதம் நூட்டாண்டு’ என்ற மலையாளப் படத்திலும், ‘அல்லூரி’ என்ற தெலுங்குப் படத்திலும், ‘ஐ பிரேம் யு’ என்ற மராத்தி படத்திலும் நடித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்