தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூழ்நிலைக்கேற்ப மாறினால் சிக்கல் இருக்காது: மமிதா பைஜு

1 mins read
0ab69121-2531-40f7-93b8-ab9928fe5995
மமிதா பைஜு. - படம்: ஊடகம்

எந்த மொழிப் படங்களில் நடிக்கிறாரோ, அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதாகவும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் செயல்படுவதாகவும் கூறியுள்ளார் மலையாள வரவான மமிதா பைஜு.

தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’ படத்தில் நடித்துள்ள இவருக்குத் தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றனவாம்.

அண்மையில் கேரளாவின் கொச்சி நகரில் நடைபெற்ற டியூட் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மமிதா பைஜு. அப்போது, வெவ்வேறு மொழிப் படப்பிடிப்புகளில் பங்கேற்கும் அனுபவம் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு, “நான் எப்போதும் எதுவும் எழுதப்படாத கரும்பலகைபோல், படப்பிடிப்புக்குச் செல்லும்போது காணப்படுவேன். பின்னர், மொழி, படமாக்கப்படும் காட்சிகள், படப்பிடிப்பு நடக்கும் இடம், அங்குள்ள பருவநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்வேன். எனவே இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை,” என்று பதிலளித்தார் மமிதா பைஜு.

அவ்வளவு ஏன், மலையாளத்திலேயே ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்தால், இரு படப்பிடிப்புகளும் வெவ்வேறு அனுபவங்களைத் தரும் என்று குறிப்பிட்ட அவர், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வேலை பார்ப்பதால் எந்தச் சிக்கலும் வருவதில்லை என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்