கர்நாடக அரசின் ‘மைசூர் சாண்டல் சோப்’ விளம்பரத் தூதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் நடிகை தமன்னா.
இதற்காக அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டதும் அது சர்ச்சையானதும் தெரிந்த சங்கதிகள்தான்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விளம்பரத் தூதர் என்ற வகையில் கலந்துகொண்டார் தமன்னா.
அப்போது மனம்விட்டுப் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழில் நடிக்க வேண்டும் என்றால் தமக்கு மிகவும் விருப்பம் என்று கூறினார்.
அடுத்து, ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க விருப்பப்படுவதாகவும் அதுகுறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தமன்னா பேசியதைக் கன்னட ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
இதையடுத்து, மீண்டும் இவரை விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வது விவாதப் பொருளாகிவிட்டது.
“தமன்னாவுக்குப் பதிலாக ஏன் ஒரு கன்னட நடிகைக்கு இந்த விளம்பர வாய்ப்பைத் தரவில்லை?” என்று ஒருதரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

