திரையில் இணையும் சூர்யா, நஸ்ரியா

1 mins read
649aadf2-568b-47da-a705-d254c7f45003
 சூர்யா, நஸ்ரியா. - படம்: ஊடகம்

நடிகர் சூர்யாவும் நடிகை நஸ்ரியாவும் புதுப் படம் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் 46வது படம் உருவாகி வருகிறது.

இதையடுத்து, அவரது 47வது படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குவது உறுதியாகி உள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், நஸ்‌ரியாவை இப்படத்தின் நாயகியாக நடிக்க வைக்க, இயக்குநர் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டதாம். அதைத் தயாரிப்புத் தரப்பும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

முன்னதாக, சூர்யாவும் நஸ்‌ரியாவும் ‘புறநானூறு’ படத்தில் இணைந்து நடிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அந்தப் படம் கைவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்