தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வதந்தி பரப்புவதை நிறுத்தவும்: அனிருத் வேண்டுகோள்

1 mins read
7fe66cbc-7bc1-4822-87cf-1ff38042870c
அனிருத். - படம்: ஊடகம்

இளம் இசையமைப்பாளர் அனிருத் காதல் வயப்பட்டுள்ளதாகவும் ஐபிஎல் அணி ஒன்றின் பெண் உரிமையாளருடன் அவருக்குத் திருமணம் நடக்க இருப்பதாகவும் அண்மை காலமாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வந்தது.

ஆனால், அனிருத் தரப்போ, இதில் துளிகூட உண்மை இல்லை என்றும் இது அப்பட்டமான வதந்தி என்றும் உறுதியாக மறுத்துள்ளது.

“எனக்குத் திருமணமா... அமைதியாக இருக்கவும் நண்பர்களே, வதந்தி பரப்புவதை நிறுத்தவும்,” என தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

34 வயதான அனிருத், இதற்கு முன்பு இதுபோன்ற காதல், திருமணம் தொடர்பான வதந்திகள் வெளியானால் ஏதும் கருத்து சொல்லாமல் அமைதியாகக் கடந்து போய்விடுவார்.

இம்முறை அவரே வலிய முன்வந்து மறுத்துள்ளார். இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இணையவாசிகள் கூறுகின்றனர்.

தீவிர ரசிகர்களோ, எப்போது திருமணம் எனக் கேட்டு தொடர்ந்து அவரை நச்சரித்து வருகின்றனர்.

தற்போது தமிழில் ‘கூலி’, ‘மதராஸி’, ‘ஜனநாயகன்’, ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களிலும், தெலுங்கில் ‘கிங்டம்’, ‘தி பாரடைஸ்’ படங்களிலும், இந்தியில் ‘கிங்’ படத்திலும் இசையமைத்து வருகிறார் அனிருத்.

குறிப்புச் சொற்கள்