தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வதந்திகளுக்கு ஸ்ரீலீலா, சமந்தா முற்றுப்புள்ளி

1 mins read
35fe6dea-c964-4893-a42b-197917fd6b96
மும்பையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற சமந்தா, ஸ்ரீ லீலா. - படம்: இந்திய ஊடகம்

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகைகளான சமந்தா, ஸ்ரீலீலா ஆகியோர் பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகி புதிய படங்களில் நடித்து வருகின்றனர்.

‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா...’ பாடலுக்குச் சமந்தா நடனமாடி இருந்த நிலையில், ‘புஷ்பா-2’ படத்தில் சமந்தாவுக்கு பதில் ஸ்ரீ லீலா ‘கிஸ்ஸிக்’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.

‘புஷ்பா’ பாடலைப் போலவே ‘புஷ்பா-2’ பாடலும் பெரிய அளவில் பிரபலமானதைத் தொடர்ந்து, சமந்தா- ஸ்ரீ லீலாவுக்கு இடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கோலிவுட் வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டிருந்தன.

இந்நிலையில், மும்பையில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்ற பட விழா ஒன்று நடைபெற்றது. அதில், சமந்தாவும் ஸ்ரீ லீலாவும் பங்கேற்றனர்.

அப்போது தனியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சமந்தா, ஸ்ரீ லீலா வருவதைக் கண்டதும் அவரை அருகில் அழைத்து கட்டிப்பிடித்தபடி புகைப்படம் எடுத்து, அளவளாவினார்.

இதையடுத்து, தங்களது உறவில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகப் பரவிய வதந்திக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

“எனது வாய்ப்புகளை ஸ்ரீ லீலா தட்டிப் பறித்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. சமூக ஊடகங்கள் பரப்பும் போலித் தகவல்களையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு எப்போதும்போல் எனக்கு கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது. அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதனால்தான் ஸ்ரீ லீலாவை அழைத்து நட்பு பாராட்டிப் பேசினேன்,” என்று சமந்தா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்