தென்கொரிய இணையத் தொடர்களுக்கு ஏராளமான இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டு நடிகை ஒருவர் தெலுங்குப் படம் ஒன்றில் அறிமுகமாகிறார்.
படத்தின் பெயர் ‘வேதாவியாஸ்’. தொழிலதிபர் கொம்முரி பிரதாப் ரெட்டி தயாரிக்கும் இப்படத்தை, எஸ்.வி.கிருஷ்ணா ரெட்டி இயக்குகிறார்.
“இதில் ஜுன் ஹியூன் ஜி என்ற கொரிய நடிகையை அறிமுகப்படுத்துகிறோம். இவர் ‘மை சாஸி கேர்ள்’ (2001), ‘மை லவ் ஃப்ரம் தி ஸ்டார்’ போன்ற படங்களில் நடித்தவர்.
“ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை விவரிக்கும் கதையில் நடிக்க இவர் பொருத்தமானவராக இருந்தார். அதனால்தான் தேர்வு செய்தோம்,” என்கிறார் இயக்குநர் கிருஷ்ணா ரெட்டி.
இவர் இயக்குநரான புதிதில், நிறைய வெற்றிப் படங்களை அளித்தவர். அதன் பிறகு நிறைய தோல்விகளைச் சந்தித்ததால், திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்புதிய படத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளார்.