தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த மூன்று கதாநாயகிகளுக்கு அடுத்தடுத்து திருமணம் நடைபெற உள்ளது.
நடிகர் விஷாலும் நடிகை சாய் தன்ஷிகாவும் காதலிக்கும் தகவலே அண்மையில்தான் தெரியவந்தது. ஆனால், இத்தகவலை ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஷால், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா ரவிச்சந்திரனுக்கும் ஒளிப்பதிவாளர் கவுதம் என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. ‘கருப்பன்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘அகிலன்’, ‘ரசவாதி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் தான்யா.
‘பிக்பாஸ்’ புகழ் ரித்விகா, வினோத் லட்சுமணன் என்பவரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இவர் ‘கபாலி’, ‘மெட்ராஸ்’, ‘ஒருநாள் கூத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
கோடம்பாக்கத்தில் கெட்டிமேளச் சத்தம் அடுத்தடுத்து பலமாக ஒலிக்கப் போகிறது.

