கோபி - சுதாகர் படத்தில் சிவகார்த்திகேயன் பாடல்

1 mins read
c48956e1-222e-44a8-ac38-a357ef03bf7e
நடிகர் சிவகார்த்திகேயனுடன் யூடியூப் பிரபலங்கள் சுதாகர், கோபி. - படம்: ஊடகம்

யூடியூப் பிரபலங்களான சுதாகர், கோபி ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

‘ஓ காட் பியூட்டிஃபுல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றைப் பாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரிதாபங்கள் எனும் யூடியூப் ஒளிவழி மூலம் தனித்துவமான காணொளிகளைப் பதிவிட்டு தங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில் கோபியும் சுதாகரும் இணைந்து நடிக்கும் அப்படத்தை ‘பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் அவர்களே தயாரிக்கின்றனர்.

அப்படம் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகி வருவதாகப் படக்குழு தெரிவித்துள்ள நிலையில், அப்படத்தின் சுவரொட்டியை அண்மையில் வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்