படங்களைத் தயாரிப்பதில்தான் அதிக மகிழ்ச்சி கிடைக்கும்: சிவகார்த்திகேயன்

1 mins read
ee9bad61-51fd-40da-ab41-3a8fb54cd586
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

நடிப்பதைவிட படங்களைத் தயாரிப்பதில்தான் அதிக மகிழ்ச்சி கிடைப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

நடிகர் ரவி மோகனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், மேலும் பல கதாநாயகர்கள் பட நிறுவனங்கள் தொடங்கி திறமைசாலிகளுக்கு களம் அமைத்துத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

“படத் தயாரிப்பு என்பது ஒரு தாயாக மாறிவிடுவது போன்ற பரவசம் தரக்கூடிய அனுபவம். இப்போது ஒரு படம் தயாரிக்கிறேன். அதன் படத்தொகுப்புப் பணிகளை நேரில் கண்டபோது அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டது.

“படத் தயாரிப்பில் நான் ரவி மோகனைவிட மூத்தவன். என்னால் முடிந்த உதவிகளை வழங்கத் தயார். அவரது நிறுவனத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். ஒருவேளை இன்றே அதற்கான முன்பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளத் தயார்,” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் சிவகார்த்திகேயன்.

குறிப்புச் சொற்கள்