சிறைச்சாலை பின்னணியில் சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘சிறை’.
விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் கதை எழுத, சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.
தமிழில் ‘மாஸ்டர்’, ‘லியோ’, ‘மகான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களைத் தயாரித்த லலித்குமார் மகன் அக்ஷய் குமார் இரண்டாவது நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, அனந்தா, அனிஷ்மா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
தமிழில் ஏற்கெனவே ‘சிறை’ என்ற பெயரில் கடந்த 1984ஆம் ஆண்டு ஒரு படம் வெளியானது. அதில் ராஜேஷ், லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார் லட்சுமி.
ஆனால், அந்தப் படத்துக்கும் இந்தப் புதிய ‘சிறை’க்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம்.

