சொந்தமாகப் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் நடிகை சிம்ரன்.
அண்மையில் இவர் சசிகுமாருடன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சவாலான, அழுத்தமான கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இதனிடையே, ‘4டி மோஷன் பிக்சர்ஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் சிம்ரன். இந்நிறுவனம் சார்பாக முழுநீள அதிரடி சண்டைப் படம் ஒன்றைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதை ஷியாம் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
ஒரு பக்கம் படங்களைத் தயாரித்தபடியே, மற்றொரு பக்கம் நல்ல வேடங்களில் நடிப்பதுதான் சிம்ரனின் திட்டமாம்.
மேலும், முதற்கட்டமாக குறைந்த செலவில் படங்களை எடுப்பது என்றும் பின்னர் முன்னணி நாயகர்களை வைத்து படங்களைத் தயாரிப்பது என்றும் அவர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

