‘கூலி’ படத்தில் தனக்கு வலிமையான கதாபாத்திரம் அமைந்திருப்பதாகக் கூறியுள்ளார் ஷ்ருதி ஹாசன். இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜின் மகள் வேடத்தில் நடிப்பதையும் அண்மைய பேட்டியில் அவர் உறுதி செய்துள்ளார்.
“எனக்கு வலிமையான பெண்மை நிறைந்த பாத்திரத்தைத் தந்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதற்காக அவருக்கு என் நன்றி. எனது கதாபாத்திரத்தின் பெயர் பிரீத்தி. கண்டிப்பாக எனது பாத்திரமும் நடிப்பும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தப் படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடித்துள்ளார். முன்பே நான் அவரது ரசிகை. இப்போது, அவரது நடிப்பை நேரடியாகப் பார்த்தபிறகு தீவிர ரசிகையாகிவிட்டேன்,” என்று கூறியுள்ளார் ஷ்ருதி.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகெங்கும் திரைகாண உள்ளது.

