ஷாருக் கான் மிகச் சிறந்த தந்தை: அனன்யா பாண்டே

1 mins read
9f2e644c-4b89-4ae2-98d3-cf172057aefb
அனன்யா பாண்டே, ஷாருக் கான். - படம்: ஊடகம்

இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக் கான் தனது தந்தையைப் போன்றவர் என்கிறார் பிரபல இளம் நாயகி அனன்யா பாண்டே.

அவர் எந்த அளவு அற்புதமான தந்தை என்பதை பலமுறை நேரில் கண்டு வியந்திருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் அனன்யா குறிப்பிட்டுள்ளார்.

“உண்மைதான். ஷாருக் கான் எனக்கு இரண்டாவது தந்தையைப் போன்றவர். தனது தனிப்பட்ட, தொழில் வாழ்க்கையை மிக அருமையாக கையாள்கிறார்.

“சிறு வயதில் அவரது பிள்ளைகளுடன் நான் நிறைய பொழுதைச் செலவிட்டிருக்கிறேன். அவருடன் பலமுறை பேசியிருக்கிறேன். இந்த உலகத்தில் நம்மைவிடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதுபோல் நம்மை உணர வைப்பார். அதனால்தான் அவரைப் போல் இன்னொருவரைப் பார்க்க முடியாது என்று அடிக்கடி சொல்வேன்.

“எனது தோழி அதிர்ஷ்டசாலி. சிறந்த தந்தையைப் பெற்றவர். நாங்கள் அனைவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண சேர்ந்தே செல்வோம்,” என்று கூறியுள்ளார் அனன்யா பாண்டே.

குறிப்புச் சொற்கள்