‘சார்பட்டா 2’: படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்

1 mins read
bd724a3f-e73b-439a-91a1-3821c2634ef7
‘சார்பட்டா பரம்பரை’ முதல் பாகம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. - படம்: இந்திய ஊடகம்

‘வேட்டுவம்’ பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, ‘சார்பட்டா 2’ படத்துக்கான படப்பிடிப்பை தொடங்க நடிகர் ஆர்யா முடிவு செய்திருக்கிறார்.

அவர், தற்போது தனது உடலமைப்பை முழுமையாக மாற்றி அமைத்திருக்கிறார். இதனால் அதற்கு தகுந்தாற் போன்று கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ படத்தில் கவனம் செலுத்துகிறார் ஆர்யா. இதில் தினேஷ் நாயகனாக நடித்து வந்தாலும், ஆர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘வேட்டுவம்’ பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, ‘சார்பட்டா 2’ படத்தைத் தொடங்க ஆர்யா ஆவலுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா. ரஞ்சித் தயாரித்து, இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவிருப்பதாக ஆர்யா குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு சந்தானத்துடன் இணைந்து நடிக்க ஆர்யா முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக மூன்று இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வைத்துள்ளார். இதில் எந்தக் கதை பொருத்தமாக இருக்கிறதோ, அதில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து இப்படம் உருவாக இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்