நடிகராகக் களமிறங்கும் கங்கை அமரனை வாழ்த்திய சரத்குமார்

1 mins read
23bde246-dcfc-4f91-b822-79aa74df8e25
‘லெனின் பாண்டியன்’ படத்தில் கங்கை அமரன். - படம்: ஊடகம்

திரைத்துறையில் இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தவர் கங்கை அமரன்.

குறிப்பாக, பாடலாசிரியராகக் கவிஞர் வாலியே தனக்கு இணையான கவித்திறன் படைத்தவர் கங்கை அமரன் என்று மனதாரப் பாராட்டும் அளவுக்குத் திறமையானவர்.

அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரரான அவர், தனது 77வது வயதில் தமிழ்த் திரையுலகில் நடிகராகக் களமிறங்கியுள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லெனின் பாண்டியன்.

அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்கை அமரன் நடிக்கிறார்.

இதற்கு முன்னர் தான் இயக்கிய படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தார் அவர்.

இதற்கிடையே, ஒரு நிமிடக் காணொளி ஒன்றை அப்படக்குழு வெளியிட்டது. அதில், கங்கை அமரனின் நடிப்பைப் பார்த்த பலர், அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் எனப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த ஒரு நிமிடக் காணொளியைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சரத்குமார், கங்கை அமரனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், “இயக்குநராகப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் மிளிர்ந்தவர், தனது திரை வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை நடிகராகத் தொடங்குகிறார். அவருக்கும் லெனின் பாண்டியன் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்