திரையுலக முன்னணி நடிகையான சமந்தா, கைப்பேசிகள் குறித்து பகிர்ந்து கொண்ட ஒரு கருத்து சமூக ஊடகங்களில் நெருப்பாகப் பரவி வருகிறது.
அதில், “என் கையில் எப்போதும் வைத்திருக்கும் கைப்பேசி குறித்து எனக்கு ‘திடீர்’ சிந்தனை எழுந்தது என்று கூறியுள்ளார்.
“மூன்று நாள்கள் என் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்தேன். யாருடனும் பேசவில்லை. யாரையும் தொடர்புகொள்ளவும் இல்லை. யாரையும் பார்க்கவும் இல்லை. புத்தகம் படிப்பது, எழுதுவது என எந்த வேலையும் செய்யவில்லை. 3 நாட்கள் என் மூளைக்கு முழு ஓய்வு தந்தேன்.
“இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது,” என்று சமந்தா கூறியுள்ளார்.