எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதுப் படத்துக்கு ‘அரசன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ள போதும், கதாநாயகி யார் என்பது தெரியாததால் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். ‘அரசன்’ படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிப்பார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்புத் தரப்பு இதை இன்னும் உறுதி செய்யவில்லை. எனினும், சமந்தாவிடம் மொத்தமாக கால்ஷீட் வாங்கி வைத்துள்ளதாகவும் அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, சிம்பு மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில், சில காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை.
அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை-2’ படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால், ‘வடசென்னை’ இரண்டாம் பாகத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும் தனுஷ் நாயகனாக நடிப்பதாகவும் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அண்மையில் அறிவித்தார்.
இதனால் சிம்பு ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில், தாணுவின் அறிவிப்பு வெளியாகி அவர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.