இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகி உள்ள குபேரா படம் வெற்றிபெற வாழ்த்தி உள்ளார் நடிகை சாய்பல்லவி.
தனுஷ் அற்புதமான நடிகர் என்றும் சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து இயல்பாக நடிக்கக் கூடிய திறமை அவருக்கு உள்ளது என்றும் தமது எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாகர்ஜுனாவை ஒரு கொலையாளி கதாபாத்திரத்தில் பார்ப்பது ஒரு விருந்தாக இருக்கும்.
ராஷ்மிகா, இயக்குநர் சேகர் கம்முலா தனது பெண் கதாபாத்திரங்களை எவ்வளவு சக்திவாய்ந்ததாகவும் தனித்துவமாகவும் உருவாக்குகிறார் என்பது நமக்குத் தெரியும். இது உங்கள் வெற்றித் தொடரில் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரமாகவும், பிரம்மாண்டமான வெற்றியாகவும் இருக்கும்,” என்று சாய் பல்லவி மேலும் கூறியுள்ளார்.