‘ப்ரோ கோட்’ தலைப்பைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் ஜெயம் ரவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
கார்த்திக் யோகி என்பவர் இயக்கும் ‘ப்ரோ கோட்’ என்ற படத்தை ஜெயம் ரவி தயாரித்து அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஆனால், மிகப்பெரிய ஆல்கஹால் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ‘ப்ரோ கோட்’ என்ற பெயரில் மது விற்பனை செய்து வருவதால் அந்தப் பெயரைத் தலைப்பாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்படி வழக்குத் தொடர்ந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் இந்தப் பெயரைத் தலைப்பாக பயன்படுத்துவதில் தடை இல்லை என்று கூறியுள்ளது. ஆனாலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் வழக்கு தொடர்ந்து, இந்தத் தலைப்பை ரவி மோகன் பயன்படுத்த இடைக்கால தடை வாங்கியது.
அதைத்தொடர்ந்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ரவி மோகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு ஜெயம் ரவி தரப்பிலிருந்து வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றைக் கவனமாக பரிசீலித்த நீதிமன்றம் ஜெயம் ரவி தரப்பினர் வணிக ரீதியாக ‘ப்ரோ கோட்’ தலைப்பைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. இதன் இறுதித் தீர்ப்பு டிசம்பர் 15க்கு தள்ளி வைத்துள்ளது.

