சில திரைப்படங்களை இயக்கிய அனுபவம் உள்ள நடிகை ரேவதி, முதல் முறையாக ‘குட் ஒய்ஃப்’ என்ற இந்தி இணையத் தொடரை இயக்கியுள்ளார். இதில் பிரியாமணி, சம்பத்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்தொடருக்கு ‘ஓடிடி’ தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, தமிழிலும் இயக்க வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.
“இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிக வலுவானது. தனிப்பட்ட, தொழில் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் இந்தக் கதாபாத்திரத்தில், பிரியாமணி சிறப்பாக நடித்திருந்தார். அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் அபாரமாக இருந்தன.
“சம்பத்ராஜ் உள்ளிட்ட மற்றவர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். ஓடிடி உலகில் முதன்முறையாக அடியெடுத்து வைத்தது மகிழ்ச்சியான அனுபவம்,” என்று கூறியுள்ளார் ரேவதி.