துல்கர் சல்மான் படத்தில் ரம்யா கிருஷ்ணன்

1 mins read
3676f06f-af2e-46b8-bffd-a79beaa2a28b
துல்கர் சல்மான், ரம்யா கிருஷ்ணன். - படம்: ஊடகம்

‘லோகா சாப்டர் 1’ படத்தைத் தயாரித்து, கௌரவ பாத்திரத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான், தற்போது ‘காந்தா’ என்ற படத்தையும் தயாரித்து, நடித்து வருகிறார்.

இதன் பிறகு, தெலுங்கு புதுமுக இயக்குநர் ரவி நெலகுடிட்டி என்பவர் இயக்கும் தனது 41வது படத்தில் நடிக்கப் போகிறார் துல்கர் சல்மான். அந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சில நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அப்படக்குழு அறிவித்திருக்கிறது.

தமிழில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர்-2 படத்திலும் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், ‘படையப்பா’ என்ற பிரம்மாண்ட வெற்றிப்படத்தில் வில்லியாக நடித்து இன்றுவரை அந்தப் பாத்திரத்தைப் பற்றி பேசும் அளவுக்கு நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். தெலுங்கில் ‘பாகுபலி’ படம் மூலம் இந்திய அளவில் புகழின் உச்சிக்குச் சென்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்