‘தலைவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வரும்’ என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பும் காத்திருப்பும் முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சில நாள்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அது தற்போது உறுதியாகி உள்ளது.
ரஜினியின் 173வது படத்தை அவரது நண்பரான கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை வைத்து ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கியிருந்தார் சுந்தர் சி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் ரஜினியோடு இணைகிறார்.
இந்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டிருக்கும் கமல்ஹாசன், “காற்றாய் அலைந்த நம்மை தனதாக்கியது. இரு பனிப் பாறைகள் உருகி வழிந்தது இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் அலையாய் மாறுவோம். நமைக் காத்த செம்புலம் நனைக்க நாழும் பொழிவோம், மகிழ்வோம்!
“வாழ்க நாம் பிறந்த கலைமண்,” என சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் விநியோக உரிமை ‘ரெட் ஜெயின்ட்’ நிறுவனம் வாங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

