கிராந்தி குமார் இயக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாக ‘மா வந்தே’ என்ற படத்தில் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார் நடிகர் உன்னி முகுந்தன். இவர், மலையாளத்தில் ‘மார்கோ’, தமிழில் ‘கருடன்’ போன்ற வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள உன்னி முகுந்தன், “இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியாக ‘மா வந்தே’ படத்தில் நடிக்க உள்ளதை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. இது எனக்கு இன்னொரு கதாபாத்திரம் அல்ல. பெரிய பொறுப்பு; எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்ததை பற்றிப் பேசும் இந்தக் கதைக்கு நியாயம் செய்வேன் என்று நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடன் அனைத்துலகத் தரத்தில் உருவாக்கப்பட உள்ளது.

