தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மர்மம் நிறைந்த கதையைப் படமாக்கும் பிரேம்குமார்

1 mins read
dad7a608-d0f8-44cb-b85c-bcd3ffb334b4
நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் பிரேம்குமார். - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் ‘96’ என்ற படத்தை இயக்கிய பிரேம் குமார், அதன்பிறகு அரவிந்த்சாமி, கார்த்தி நடிப்பில் ‘மெய்யழகன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், அடுத்தபடியாக மீண்டும் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தார் பிரேம் குமார். ஆனால், அண்மையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கப் போவதாக ஒரு புதிய செய்தி பரவி வந்தது.

இதுகுறித்து பிரேம்குமார் தரப்பில் வெளியாகியுள்ள ஒரு செய்தியில், “தற்போது அவர் ஒரு மர்மம் நிறைந்த படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.. அந்தப் படத்தில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப்போகிறார். அது சம்பந்தமாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். மற்றபடி, ‘96’ படத்தின் அடுத்த பாகத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடிப்பார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை,” என்று தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாதிரைச்செய்திசினிமா