பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ டிசம்பரில் வெளியாகும்: லலித்குமார்

1 mins read
0d7e4a1d-886d-4f98-9471-2cf837786f8b
‘எல்ஐகே’  படத்தின் சுவரொட்டி. - படம்: இந்திய ஊடகம்

விக்னே‌‌ஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் டிசம்பர் மாதம் வெளியாவது உறுதி என்று தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார்.

‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ படங்களுக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (சுருக்கமாக எல்ஐகே). விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் டிசம்பர் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்பனை ஆகவில்லை என்பதால் படம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகவில்லை என்றாலும் படத்தை டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் லலித்குமார் தயாராகி விட்டார். அதனால் திட்டமிட்டபடி அடுத்த மாதம் ‘எல்ஐகே’ திரைக்கு வந்து விடும் என்கிறது படக்குழு.

மேலும், இந்தப் படம் காதல், நகைச்சுவை கலந்த அறிவியல் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு படமாக இருக்கும். அதோடு இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். அதனால் இந்தப் படம் பிரதீப் ரங்கநாதனின் முந்தைய வெற்றி படங்கள் வரிசையில் இடம்பெறும் என்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்

தொடர்புடைய செய்திகள்